நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நுகர்வோர் உரிமைகளின் 5 தூண்களான விழிப்புணர்வு, தேர்வு, தரம், குறைதீர்ப்பு மற்றும் கருத்து தெரிவித்தல் ஆகிவற்றை வலுப்படுத்த இலக்கு - திரு பியூஷ் கோயல்
Posted On:
24 DEC 2021 5:29PM by PIB Chennai
‘‘நுகர்வோரே - உங்கள் உரிமைகளை அறியுங்கள்’’ என்ற கருப்பொருளுடன் தேசிய நுகர்வோர் தினம் 2021-ஐ இன்று கொண்டாடியது நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம்.
இதை மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்து மின்னணு புத்தகங்களையும், குடிநீர் பரசோதனைக்கான நடமாடும் தேசிய பரிசோதனைக் கூடத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபேவும் கலந்து கொண்டார்.
தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகளையும் நுகர்வோருக்கு தரத்தை உறுதி செய்வதையும் வலியுறுத்தினார் .
பிரதமர் தலைமையின் கீழ் ‘நுகர்வோர்தான் பெரியவர்’ என்ற மந்திரத்தை பின்பற்றி நுகர்வோர் பாதுகாப்பை, நுகர்வோர் மேம்பாடு மற்றும் அவர்களின் செழுமை என நாங்கள் மாற்றியுள்ளோம். தரமான பொருட்களை நுகர்வோர் கேட்க வேண்டும் என்றும், தங்கள் உரிமைகளின் பாதுகாப்பைக் கோர வேண்டும் எனவும் அவர் கூறினார்.
பழங்காலத்தில் இருந்தே, நுகர்வோர் பாதுகாப்பு, ஆளுகையின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. ‘‘நாளைய தினம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் எனவும், இது சிறந்த ஆளுகை தினமாகக் கொண்டாடப்படுகிறது எனவும் அமைச்சர் கூறினார். சிறந்த ஆளுகையைப் பற்றி நாம் பேசும்போது, 135 கோடி மக்கள் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு கொடுத்து தற்சார்பு இந்தியாவை ஏற்படுத்துகின்றனர் என்பதை நினைவு கூரவேண்டும் ’’ என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784904
***************************
(Release ID: 1785006)
Visitor Counter : 195