ஆயுஷ்
உத்தரப் பிரதேசத்தில் மருத்துவ வசதிகளுக்கு மிகப் பெரிய உந்துதலை அளிக்கிறது ஆயுஷ் அமைச்சகம்: தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ், ரூ.553.36 கோடி முதலீடு செய்யவுள்ளது
Posted On:
24 DEC 2021 5:29PM by PIB Chennai
உத்தரப் பிரதேசத்தில் சுகாதார வசதிகளை ஊக்குவிக்க பல முக்கிய நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது. தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்துக்கு மொத்தம் ரூ.553.36 கோடியை விடுவித்துள்ளது. இந்த முக்கிய அறிவிப்புகளை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் அறிவித்தார்.
நாட்டில் நிலையான, பயனுள்ள, மற்றும் மலிவான மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கும் முயற்சியில், 8 புதிய 50 படுக்கை வசதிகள் அடங்கிய ஆயுஷ் மருத்துவமனைகள் ரூ.72 கோடி செலவில் தொடங்கப்பட்டன. மாநிலத்தின் பல பகுதிகளில் 500 புதிய ஆயுஷ் சுகாதார மற்றும் நல மையங்கள் தொடங்கப்பட்டன.
அயோத்தியில் ஆயுஷ் கல்வி மையங்கள் ரூ.49.83 கோடி செலவில் தொடங்கப்படவுள்ளது.
250 புதிய ஆயுஷ் மருத்துவமனைகள் நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்படுத்தவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784902
************************
(Release ID: 1784982)
Visitor Counter : 202