மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘‘மீன்வளத் துறைக்கான விவசாயிகள் கடன் அட்டைத் திட்டம் குறித்த தேசிய அளவிலான பிரசாரம்:’’ மத்திய மீன்வளத் துறை ஏற்பாடு செய்த வலையரங்கம்.

Posted On: 24 DEC 2021 12:16PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை முன்னிட்டுஒரு வார சிறப்பு நிகழ்ச்சியை டிசம்பர் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை நடத்துகிறது . இதன் ஒரு பகுதியாக, மீன்வளத்துறைக்கான விவசாயிகள் கடன் அட்டைத் திட்டம் குறித்த தேசிய அளவிலான பிரசாரம் குறித்த இணைய கருத்தரங்கை, டிசம்பர் 23ம் தேதி  நடத்தியது மத்திய மீன்வளத் துறை.  இதற்கு மீன்வளத்துறை செயலாளர் திரு ஜதிந்திரநாத் ஸ்வெய்ன் தலைமை தாங்கினார். இதில் மத்திய, மாநில மீன்வளத்துறை அதிகாரிகள், வேளாண், கால்நடை மருத்துவம், மீன்வளத்துறை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மீன்வளத்துறை செயலாளர் திரு ஸ்வைன், ‘‘ மீன்வளத்துறையில் விவசாயிகள் கடன் அட்டைத் திட்டம் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின்  முதலீட்டுக்கு உதவும் முயற்சி. இதன் மூலம் அனைத்து விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் போதிய கடன் கிடைக்கும்" என்று கூறினார்.

கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ், தகுதியான மீனவர்களை, மத்திய, மாநில அதிகாரிகள் தவறாமல் கண்காணிக்க வேண்டும் எனவும், குறைகளைப்  போக்கி, சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலம் கிசான் கடன் அட்டை விரைவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும்  திரு. ஸ்வைன் கேட்டுக் கொண்டார்.

மீன்வளத்துறை இணைச் செயலாளர் திரு சாகர் மெஹ்ரா பேசுகையில், ‘‘ நாட்டில் உள்நாட்டு மற்றும் கடல்சார் மீன்வளத்துறையில் மீன்வளர்ப்பை ஊக்குவித்து, விரிவுபடுத்தவும், மீன்வளர்ப்பு விவசாயிகள் இடையே  சமூகப்  பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தக்  கடன் வசதியை விரிவாக்கவும் மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்கிறது’’ என்றார். 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784765

                                                                ******************************************

 

 


(Release ID: 1784956) Visitor Counter : 289