வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புற இந்தியாவை குப்பைகள் அற்றதாக ஆக்குவதற்கான செயல் திட்டத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டது

Posted On: 24 DEC 2021 4:49PM by PIB Chennai

நல்லாட்சி தினத்தை முன்னிட்டு, 'சுகந்திரம்@75 குப்பைகளற்ற நகரங்களுக்கான நட்சத்திர மதிப்பீடு வழிமுறை - டூல்கிட் 2022'-ஐ மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டது.

குப்பைகளற்ற நகரங்களுக்கான நட்சத்திர மதிப்பீடு வழிமுறை என்பது கழிவுகள் மேலாண்மைக்கான மிகவும் முக்கியமான ஆளுகைக்  கருவியாகும்.

குப்பைகளில்லா நகரங்களை உருவாக்குவதற்கான ஒட்டுமொத்த லட்சியத்தை உள்ளடக்கிய தூய்மை இந்தியா இயக்கம் நகர்ப்புறம் 2.0-, 2021 அக்டோபர் 1 அன்று மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.

முழுமையான சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மைக்கான சூழலியலில் வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியாவை வழி நடத்துவதற்கான முன்னெடுப்புடன்  இது அமைந்துள்ளது.

தூய்மை இந்தியா இயக்கம்- நகர்ப்புறம் 2.0-ன் படியான  லட்சியத்தை அடைவதற்காக குப்பைகளற்ற நகரங்களுக்கான நட்சத்திர மதிப்பீடு வழிமுறையின் படியான மதிப்பீட்டில்  குறைந்தபட்சம் மூன்று நட்சத்திரங்களையாவது ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பும் பெற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784877

                                                                *************************************

 

 

 


(Release ID: 1784953) Visitor Counter : 249