பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவத்திற்குள் தகவல் பகிர்வுக்கான புதிய செயலி; இந்திய ராணுவம் அறிமுகம்
Posted On:
23 DEC 2021 5:35PM by PIB Chennai
அசிக்மா (பாதுகாப்பான முறையில் ராணுவத்திற்குள் செய்தியிடல் செயலி) எனும் புதிய தலைமுறை, நவீன, இணைய அடிப்படையிலான செயலியை இந்திய ராணுவம் இன்று அறிமுகப்படுத்தியது. ராணுவத்தின் கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸ் அதிகாரிகள் குழுவால் முழுக்க உள்நாட்டிலேயே இது உருவாக்கப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளாக சேவையில் உள்ள ராணுவ வைட் ஏரியா நெட்வொர்க் தகவல் முறைக்கு பதிலாக ராணுவத்தின் உள் மட்டங்களில் இந்தப் செயலி பயன்படுத்தப்படுகிறது. ராணுவத்திற்கு சொந்தமான வன்பொருளில் இது களமிறக்கப்பட்டுள்ளதோடு எதிர்கால மேம்படுத்தல்களுக்கான வாழ்நாள் ஆதரவோடு திகழ்கிறது.
அனைத்து எதிர்கால தகவல் பகிர்வு தேவைகளையும் இது பூர்த்தி செய்வதோடு மேம்பட்ட பயனர் அனுபவத்தை வழங்குகிறது. பல நிலை பாதுகாப்பு, தகவல் முன்னுரிமை மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு சமகால அம்சங்களை இந்த செயலி கொண்டுள்ளது.
எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் இந்த செயலி, ராணுவத்தின் உடனடி தரவு பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமாற்ற தேவைகளை பூர்த்தி செய்யும். குறிப்பாக, தற்போதைய புவிசார் அரசியல் பாதுகாப்பு சூழலின் பின்னணியில் இந்திய அரசின் மேக் இன் இந்தியா முயற்சிக்கு இணங்க இது உள்ளது.
குறிப்பாக கொவிட்-19 பரவலுக்குப் பிறகு தானியங்கி முறையை ஒரு முக்கிய முயற்சியாக இந்திய ராணுவம் முன்னெடுத்துள்ளதோடு, காகிதமில்லாத செயல்பாட்டை நோக்கி கணிசமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிகளை அசிக்மா மேலும் மேம்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784606
*****************
(Release ID: 1784689)
Visitor Counter : 289