சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
நாட்டின் சிறிய நகரங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த கைவினைஞர்களின் பாரம்பரியத் திறனை தேசியம் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்க “ஹுனார் ஹாட்” வாய்ப்பளித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் & தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்
Posted On:
23 DEC 2021 4:24PM by PIB Chennai
புதுதில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் 35-வது “ஹுனார் ஹாட்” எனப்படும் கைவினைப் பொருள் கண்காட்சி மற்றும் விற்பனையை மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் & தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று (23.12.2021) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தக் கண்காட்சியில் நாட்டின் அனைத்துப் பகுதி மற்றும் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் தனித்துவத் திறமை பெற்றவர்கள் என்றார். இந்தத் திறமையை மேலும் ஊக்குவிப்பதில் “ஹுனார் ஹாட்” முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் கூறினார்.
கலாச்சாரம், கைத்திறன் மற்றும் புதுமைப் படைப்புகளின் சங்கமமாக “ஹுனார் ஹாட்” திகழ்வதாகவும் திரு யாதவ் தெரிவித்தார். அத்துடன் இந்திய கைவினைஞர்களை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்து அவர்களுக்கு நிதி வாய்ப்புகளை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய கலாச்சாரத்துறை மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேஹி, இது போன்ற கண்காட்சிகள் இந்திய கலாச்சாரம் கலைக்கு புதிய சக்தியை அளித்து ஊக்குவிப்பதோடு நாட்டின் ஆன்மாவை உயிர்ப்புடன் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் திரு முக்தார் அபாஸ் நக்வி பேசுகையில், இந்த “ஹுனார் ஹாட்” கண்காட்சி இந்திய கலை மற்றும் கைவினைத் தொழில் பாரம்பரியத்தை பாதுகாத்து பேணிக்காத்து மேம்படுத்துவதற்கான சரியானத் தளமாக திகழ்கிறது என்றார். மேலும் உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கு புதிய சக்தி மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும் இது திகழ்கிறது என திரு முக்தார் அபாஸ் நக்வி தெரிவித்தார்
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784586
-----
(Release ID: 1784651)
Visitor Counter : 186