சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஆறுவழி கிழக்கு சுற்றுவட்ட விரைவுச் சாலையில் முதலாவது புலனாய்வு போக்குவரத்து முறையை திரு நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
23 DEC 2021 5:45PM by PIB Chennai
உத்தரப்பிரதேசத்தின் மீரட் மற்றும் முசாஃபர் நகரில் ரூ.9,119 கோடி மதிப்பிலான 240 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று (23.12.2021) தொடங்கி வைத்தார்.
காசியாபாதின் தஸ்னா பகுதியில் உள்ள ஆறுவழி கிழக்கு சுற்றுவட்ட விரைவுச் சாலையில், புலனாய்வுப் போக்குவரத்து முறையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு நிதின் கட்கரி, இந்த தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், இப்பகுதி விவசாயிகள் தங்களது பயிர்களை சந்தைக்கு எடுத்துச் செல்வதை எளிதாக்கி, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு வழி வகுக்கும் என்றார். அத்துடன் மாநிலத்தின் பெரிய தொழில் மையமாகத் திகழும் மீரட்டிற்கு இந்த புதிய நெடுஞ்சாலைகள், வளர்ச்சிக்கான புதிய பாதையைக் காட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளிடம் பொருளாதார வளத்தை ஏற்படுத்த, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிகளை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். ஒட்டுமொத்த முன்னேற்றம், தற்சார்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கு எத்தனால், ஹைட்ரஜன் மற்றும் பிற உயிரி – எரிபொருட்களின் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784614
-------
(रिलीज़ आईडी: 1784644)
आगंतुक पटल : 225