மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
அதிகரித்துவரும் பெண் குழந்தைகள் பள்ளி சேர்க்கை விகிதம்.
Posted On:
22 DEC 2021 5:09PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கல்வி இணை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
சமக்ர சிக்ஷா திட்டத்தை கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயல்படுத்துகிறது. கல்வி உரிமை சட்டம், 2009-ஐ செயல்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 2018-19 முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
பள்ளிக் கல்வியின் அனைத்து மட்டங்களிலும் சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்தல் சமக்ர சிக்ஷாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யுடிஐஎஸ்ஈ) / யுடிஐஎஸ்ஈ+ மொத்த சேர்க்கை தரவுகளின்படி, 2018-19 மற்றும் 2019-20-க்கான பெண்களின் மொத்த பள்ளி சேர்க்கை விகிதம் அனைத்து கல்வி நிலைகளிலும் அதிகரிப்பைக் காட்டுகிறது.
2018-19-ம் ஆண்டு அடிப்படை கல்வி சேர்க்கை விகிதம் 101.78 ஆகவும், உயர் அடிப்படை சேர்க்கை விகிதம் 88.54 ஆகவும், உயர்நிலை சேர்க்கை விகிதம் 76.93 ஆகவும், மேல்நிலை சேர்க்கை விகிதம் 50.84 ஆகவும் இருந்தது.
2019-20-ம் ஆண்டு அடிப்படை கல்வி சேர்க்கை விகிதம் 103.69 ஆகவும், உயர் அடிப்படை சேர்க்கை விகிதம் 90.46 ஆகவும், உயர்நிலை சேர்க்கை விகிதம் 77.83 ஆகவும், மேல்நிலை சேர்க்கை விகிதம் 52.40 ஆகவும் இருந்தது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784250
*********************************
(Release ID: 1784384)
Visitor Counter : 169