பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
பஞ்சாயத்து ராஜ் அமைப்பை மிகவும் பயனுள்ளதாக மாற்றுதல்.
प्रविष्टि तिथि:
22 DEC 2021 3:52PM by PIB Chennai
மாநிலங்களவையில், பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு .கபில் மொரேஸ்வர் பாடில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரும் திட்டம் ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை. பஞ்சாயத்து உள்ளூர் அரசு நிர்வாகம் என்பதால், இது மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம். நாடு முழுவதும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் செயல்பாடுகளை வலுப்படுத்த, இணையதளம் அடிப்படையிலான மின்னணு கிராம்ஸ்வராஜ் திட்டத்தை https://egramswaraj.gov.in மத்திய அரசு தொடங்கியுள்ளது. பரவலாக்கப்பட்ட திட்டமிடல், முன்னேற்றம், நிதி மேலாண்மை ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், பஞ்சாயத்து கணக்குகளை எல்லாம் ஆன்லைன் மூலம் தணிக்கை செய்ய https://auditonline.gov.in என்ற இணையதளமும் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784196
************************
(रिलीज़ आईडी: 1784348)
आगंतुक पटल : 303