பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு செய்யப்பட்டுள்ள பட்ஜெட் ஒதுக்கீடு
Posted On:
22 DEC 2021 1:33PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி சுபின் இரானி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இளம்பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் 8 மார்ச் 2018 அன்று ஊட்டச்சத்து திட்டம் (போஷன் அபியான்) தொடங்கப்பட்டது.
தகவல் தொடர்பு பயன்பாடு, ஒருங்கிணைப்பு, மக்கள் ஈடுபாடு, திறன் மேம்பாடு, ஊக்கத்தொகை, விருதுகள் மற்றும் புதுமைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் நாடு முழுவதும் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினைகளை இத்திட்டம் நிவர்த்தி செய்கிறது.
மிஷன் போஷன் 2.0 எனப்படும் துணை ஊட்டச்சத்து திட்டம் மற்றும் போஷன் அபியான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ஆதரவு திட்டம், 2021-2022 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் ஊட்டச்சத்து உள்ளடக்கம், விநியோகம், மக்களை சென்றடைதல், ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட விளைவுகளை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் 2017-18 நிதியாண்டில் இருந்து 2020-21 நிதியாண்டு வரை நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு ரூ 531279.08 லட்சம் மத்திய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2021 மார்ச் 31 வரை ரூ 298555.92 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் 2017-18 நிதியாண்டில் இருந்து 2020-21 நிதியாண்டு வரை தமிழ்நாட்டிற்கு ரூ 25931.46 லட்சம் மத்திய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2021 மார்ச் 31 வரை ரூ 19476.85 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784143
*****
(Release ID: 1784347)
Visitor Counter : 2233