சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாகனங்களின் அகில இந்திய பதிவு.

प्रविष्टि तिथि: 22 DEC 2021 2:50PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

புதிய வாகனங்களுக்கான “பாரத் தொடர் (BH சீரிஸ்)” எனும் புதிய பதிவு அடையாளத்தை 26.08.2021 அன்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.

இந்த பதிவு முத்திரையைக் கொண்ட ஒரு தனிப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு இடம்பெயரும் போது, வாகனத்திற்கு புதிய பதிவு முத்திரையை பெற வேண்டிய அவசியமில்லை.

பாதுகாப்புப் பணியாளர்கள், மத்திய அரசு/மாநில அரசுகள்/மத்திய/மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் தங்கள் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் தனியார் துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு இந்த வாகனப் பதிவு வசதி வழங்கப்படுகிறது.

இரண்டு வருடங்களுக்கு அல்லது இரண்டின் மடங்குகளில் மோட்டார் வாகன வரி விதிக்கப்படும். பதினான்காம் ஆண்டு நிறைவடைந்த பிறகு, மோட்டார் வாகன வரி ஆண்டுதோறும் விதிக்கப்படும். இது அந்த வாகனத்திற்கு முன்பு வசூலிக்கப்பட்ட தொகையில் பாதியாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784173

                                                                ******************************

 

 

 

 


(रिलीज़ आईडी: 1784321) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Malayalam