பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
சைபர் தளத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
22 DEC 2021 1:35PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி சுபின் இராணி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000-ன் 67பி பிரிவு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களை இணையத்தில் வெளியிடுவதற்கு அல்லது பார்ப்பதற்கு கடுமையான தண்டனையை வழங்குகிறது.
தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 பயனர்களின் பாதுகாப்பிற்கு சமூக ஊடக தளங்களை பொறுப்பாக்குகிறது.
இந்தியாவில் உள்ள இன்டர்போலுக்கான தேசிய முகமையான சிபிஐ மூலம் பெறப்பட்ட இன்டர்போல் பட்டியலின் அடிப்படையில், தீவிர குழந்தைகள் பாலியல் வன்கொடுமை காட்சிகள் அடங்கிய இணையதளங்களை அரசு அவ்வப்போது முடக்குகிறது.சிறுவர் சார்ந்த ஆபாசம் தொடர்பான அணுகலைத் தடுக்க இணைய சேவை வழங்குநர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் குற்றத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவு-14 ஆபாச நோக்கங்களுக்காக குழந்தைகளைப் பயன்படுத்துவதற்கான தண்டனையை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
(வெளியீட்டு அடையாள எண்: 1784225)
வருகையாளர் எண்ணிக்கை : 282