புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா சாதனை
Posted On:
21 DEC 2021 1:27PM by PIB Chennai
இந்தியாவின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் உலகின் 4-வது அதிக அளவாக உள்ளது. 30 நவம்பர் 2021 வரை நாட்டில் மொத்தம் 150.54 ஜிகாவாட் அளவிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி (பெரிய அளவிலான நீர்மின் திட்டங்கள் உட்பட) நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர 2021-22-ல் (அக்டோபர் 2021 வரை) பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மொத்தம் 2,19,817.14 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டில் செயல்படும் பெரும்பாலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள், வெளிப்படையான ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் துறையினரால் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சிறிய அளவிலான மின் உற்பத்தியாளர்களின் நலனைப் பாதுகாக்கும் விதமாக மாநிலம் / யூனியன் பிரதேசங்கள் சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்கள் (5 மெகாவாட்டுக்கும் குறைவானவை) மற்றும் காற்றாலை மின் உற்பத்தியாளர்களிடமிருந்து (25 மெகாவாட்டுக்கும் குறைவானவை). மின்சாரத்தை கொள்முதல் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், திரு ஆர் கே சிங் கூறியுள்ளார்.
------
(Release ID: 1783952)
Visitor Counter : 247