நித்தி ஆயோக்
தெற்கு-தெற்கு புதுமைகள் தளத்தின் கீழ் முதல் வேளாண் தொழில்நுட்ப கூட்டமைப்பை எய்ம், நிதி ஆயோக் மற்றும் யுஎன்சிடிஎஃப் அறிவித்தன
Posted On:
21 DEC 2021 1:56PM by PIB Chennai
பெருந்தொற்றுக்குப் பிந்தைய சவால்களை ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள சிறு விவசாயிகள் எதிர்கொள்ள உதவுவதை நோக்கமாகக் கொண்ட புதுமையான வேளாண் தொழில்நுட்பத் திட்டத்திற்காக முதல் அக்ரிடெக் சவால் கூட்டமைப்பை அடல் இன்னோவேஷன் மிஷன் (எய்எம்), நிதி ஆயோக் மற்றும் ஐக்கிய நாடுகளின் மூலதன மேம்பாட்டு நிதியம் (யுஎன்சிடிஎஃப்) ஆகியவை உருவாக்கியுள்ளன. டிசம்பர் 21, 2021 அன்று இந்த நிகழ்வு நடைபெற்றது.
யுஎன்சிடிஎஃப், பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் ராபோ ஃபவுண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து புதுமைகள், நுண்ணறிவு மற்றும் முதலீடுகளின் எல்லை தாண்டிய பரிமாற்றத்தை செயல்படுத்த தெற்கு-தெற்கு தளத்தை இந்த ஆண்டு ஜூலையில் எய்ம் மற்றும் நிதி ஆயோக் அறிமுகப்படுத்தின.
இந்தியா, இந்தோனேசியா, மலாவி, மலேசியா, கென்யா, உகாண்டா, ஜாம்பியா ஆகிய இடங்களில் உள்ள வளர்ந்து வரும் சந்தைகளில்
இந்த தளத்தின் மூலம் எல்லை தாண்டிய ஒத்துழைப்பு உருவாக்கப்படும்.
வேளாண் தொழில்நுட்ப துறையை சேர்ந்த புதுமையாளர்களின் கண்டுபிடிப்புக்களை சர்வதேச சந்தைகளில் விரிவாக்கம் செய்வதற்காக இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மொத்தம் 100 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றிலிருந்து 10 உயர் வளர்ச்சி கண்டுபிடிப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கூட்டமைப்பை அறிமுகப்படுத்தும் காணொலி கூட்டத்தில் பேசிய நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், “இந்தியாவில், 50%-க்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15-18% பங்களிப்பை விவசாயம் வழங்குகிறது. விவசாயம் என்பது மக்களை உணர்ச்சிப்பூர்வமாக ஈர்க்கும் ஒரு துறையாக இருப்பதால், அவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய முகமைகள் ஊக்கப்படுத்தப்படுகின்றன,” என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783776
*****
(Release ID: 1783906)
Visitor Counter : 231