நித்தி ஆயோக்

ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துடன் ஆராய்ச்சிக்கான உடன்பாட்டில் நித்தி ஆயோக் கையெழுத்திட்டுள்ளது

Posted On: 21 DEC 2021 10:39AM by PIB Chennai

ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துடன் ஆராய்ச்சிக்கான உடன்பாட்டில் நித்தி ஆயோக் 2021, டிசம்பர் 20 அன்று கையெழுத்திட்டது. 2023 சிறு தானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக இருக்கும் நிலையில், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உலகளவில் அறிவு பரிமாற்றம் செய்வதில் தலைமையேற்க இந்தியாவிற்கு உதவுவதில் சிறு தானியங்களின் முக்கிய நாடாக விளங்குவதும் இந்த உடன்பாட்டின் நோக்கமாகும். மேலும் சிறிய அளவு நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கான வாழ்வாதாரங்களை உறுதியாகக் கட்டமைப்பதையும், பருவநிலை மாற்றத்திற்கான திறன்களை பயன்படுத்துவதையும் உணவு முறைகளில் மாற்றம் செய்வதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது.

இந்தியாவில் விரிவடைந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கு பருவநிலையைத் தாக்குப் பிடிக்கும் வேளாண்மையை பலப்படுத்துவதற்கு யுக்திகள் வகுத்தல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு இந்த உடன்பாடு கவனம் செலுத்தும்.

மத்திய அரசின் அமைச்சகங்கள், மாநில அரசுகளில் உள்ள சம்பந்தப்பட்ட துறைகள், தெரிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்கள், சிறு தானியங்களை ஊக்கப்படுத்துவதற்கான துறையில் செயல்படும் அமைப்புகள் ஆகியவற்றுடன் இருதரப்பினரும் கூட்டாக தேசிய அளவில் கலந்தாலோசனை நடத்த இந்த உடன்பாடு வகை செய்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783716

******



(Release ID: 1783808) Visitor Counter : 254