பாதுகாப்பு அமைச்சகம்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறல்
Posted On:
20 DEC 2021 3:02PM by PIB Chennai
ஜம்மு கஷ்மீரில் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 30 நவம்பர் 2019 முதல் 29 நவம்வர் 2021 வரை மொத்தம் 5,601 சண்டை நிறுத்த ஒப்பந்த அத்துமீறல்கள் நடந்துள்ளது. பாகிஸ்தானின் சண்டை நிறுத்த அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி கொடுக்க, எல்லைப்புற சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியப் படைகள் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் சோதனைச்சாவடிகள் மற்றும் வீரர்களுக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய்பட் தெரிவித்துள்ளார்.
•••••••••••••
(Release ID: 1783571)
Visitor Counter : 255