சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரின பாதுகாப்பு தொழில் வாய்ப்பு
Posted On:
20 DEC 2021 3:05PM by PIB Chennai
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர்களை பங்கேற்கச் செய்யவும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை, சுற்றுச்சூழல் கல்வி, விழிப்புணர்வு மற்றும் பயிற்சி (EEAT) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் தேசிய பசுமைப்படைத் திட்டத்தின்கீழ், பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கவும், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பாதுகாக்கப்பட்ட இடங்கள், வன உயிரின சரணாலயங்கள், தேசிய பூங்காக்களில் பள்ளி மாணவர்களுக்கு களப் பயணம் / இயற்கை முகாம்கள் அமைக்கவும் அமைச்சகம் ஆதரவு அளித்து வருகிறது.
இதுதவிர, தேசிய சேவைத் திட்டத்தின் வழக்கமான செயல்பாடுகளிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் நலத்துறையும் தெரிவித்துள்ளது. தேசிய சேவைத்திட்ட தன்னார்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு மற்றும் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவ்பே தெரிவித்துள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783421
•••••••••••••••
(Release ID: 1783514)