பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலய வளாகத் தொடக்கவிழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Posted On:
13 DEC 2021 5:25PM by PIB Chennai
ஹர ஹர மகாதேவ்! ஹர ஹர மகாதேவ்! நம பார்வதி பதயே! ஹர ஹர மகாதேவ்! மாதா அன்னபூர்ணாவுக்கு ஜே! கங்கை மயாவுக்கு ஜே! வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் படேல் அவர்களே, உத்தரப்பிரதேசத்தின் கர்மயோகி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், நம் அனைவரின் வழிகாட்டியுமான திரு ஜே பி நட்டா அவர்களே, துணை முதலமைச்சர்கள் கேசவ் பிரசாத் மௌரியா அவர்களே, தினேஷ் சர்மா அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது சகா மகேந்திரநாத் பாண்டே அவர்களே, உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுதந்திரதேவ் சிங் அவர்களே, காசியை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர் நீல்காந்த் திவாரி அவர்களே, நாடு முழுவதிலுமிருந்து இங்கு வந்துள்ள புனிதமான சாதுக்களே, காசியில் குடியிருக்கும் எனதருமை குடியிருப்புவாசிகளே, இந்த நிகழ்வைப் பார்த்து கொண்டிருக்கும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சமய நம்பிக்கையாளர்களே, காசியின் சகோதரர்கள் அனைவருடன் நான் பாபா விஸ்வநாதர் மற்றும் மாதா அன்னபூர்ணாவின் பாதங்களில் பணிந்து வணங்குகிறேன். காசி காலபைரவ் அவர்களின் ஆலயத்திற்கு நான் வருகை தந்தது நாட்டு மக்களுக்கு அவரது வாழ்த்துக்களைப் பெறுவதற்காக. காசியில் ஏதாவது சிறப்புடையதாக இருந்தால் அல்லது புதிதாக ஏதேனும் நிகழ்ந்தால் அவரது அனுமதியைப் பெறுவது அவசியமாகும்.
நண்பர்களே,
புராணங்களின் படி ஒருவர் காசிக்குள் நுழைந்த அந்த தருணத்திலேயே அனைத்து தளைகளிலிருந்தும் விடுதலைப் பெறுகிறார். நாம் இங்கே வந்தவுடனேயே பகவான் விஸ்வேஸ்வராவின் ஆசியுடன் தெய்வீக சக்தி நமது ஆன்மாவை விழிப்படைய செய்கிறது. இன்று பாபாவின் கோயிலுக்கு வந்தவுடன் அதே போன்ற அனுபவத்தை நான் பெற்றிருக்கிறேன்.
நண்பர்களே,
விஸ்வநாதர் ஆலயம் இன்று கற்பனை செய்ய இயலாத, அளவற்ற சக்தியால் நிரம்பியுள்ளது. இதன் முக்கியத்துவம் விண்ணைத் தொடுவதாகும். இங்கே இடிந்துபோன பழங்கால கோயில்கள் பலவும் மறுநிர்மாணம் செய்யப்பட்டுள்ளன. விஸ்வநாதர் ஆலயத்தின் இந்த புதிய வளாகம் மாபெரும் கட்டுமானம் மட்டுமல்ல, நமது இந்தியாவின் சனாதன கலாச்சாரத்தின் அடையாளமாகவும் இருக்கிறது.
சகோதர, சகோதரிகளே,
இந்த மகத்தான கோயில் வளாகத்தை கட்டுவதற்கு வியர்வை சிந்திய நமது தொழிலாள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது நன்றியை நான் தெரிவிக்க விரும்புகிறேன். கொரோனா காலத்திலும் கூட இவர்கள் தங்களின் பணியைக் கைவிட்டுவிடவில்லை. இந்த தொழிலாள நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்பை பெற்றிருப்பதோடு அவர்களின் வாழ்த்துக்களை பெறுவதற்கும் நான் பெருமை கொண்டுள்ளேன். நமது கைவினைக் கலைஞர்கள், கட்டுமானப் பொறியியல் துறையோடு சம்பந்தப்பட்டவர்கள், நிர்வாகிகள், இங்கு தங்களின் வீடுகளை கொண்டுள்ள குடும்பத்தினர் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். உத்தரப்பிரதேச அரசு, கர்மயோகி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள், காசி விஸ்வநாதர் ஆலய வளாகத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய இரவு பகலாக உழைத்த அவரது ஒட்டுமொத்த அணியினர் ஆகியோரையும் நான் பாராட்டுகிறேன்.
***
(Release ID: 1783509)
Visitor Counter : 188
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam