பாதுகாப்பு அமைச்சகம்
கட்டுப்படுத்தக்கூடிய வான்வழி விநியோக அமைப்பின் விளக்கக்காட்சியை டிஆர்டிஓ நடத்தியது
Posted On:
19 DEC 2021 10:54AM by PIB Chennai
500 கிலோ திறன் கொண்ட கட்டுப்படுத்தக்கூடிய வான்வழி விநியோக அமைப்பின்( CADS-500) விளக்கக்காட்சியை ஆக்ராவை சேர்ந்த வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஏடிஆர்டிஈ), டிசம்பர் 18, 2021 அன்று நடத்தியது.
வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகமாகும்.
75-ம் ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் விடுதலையின் அமிர்த மகோத்ஸவத்தை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த விமான விளக்கக்காட்சி நடைபெற்றது.
ராம் ஏர் பாராசூட்டின் திறன்களைப் பயன்படுத்தி, முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடத்தில், 500 கிலோ வரையிலான பொருட்களை துல்லியமாக விநியோகிக்க CADS -500 பயன்படுத்தப்படுகிறது. ஜிபிஎஸ் குளோபல் பொசிஷனிங் அமைப்பை பயன்படுத்தி ஒருங்கிணைப்பு, உயரம் மற்றும் திசைகள் அறிதலை இது மேற்கொள்கிறது.
மின்னணு அலகுடன் கூடிய CADS , இயக்கக் கட்டுப்பாடுகள் மூலம் இலக்கின் இருப்பிடத்தை நோக்கி வே பாயிண்ட் வழிசெலுத்தலைப் பயன்படுத்தி தன்னியக்கமாக அதன் பயணத்தை வழிநடத்துகிறது.
5000 மீ உயரத்தில் இருந்து மல்புராவில் உள்ள டிராப் சோனில் கணினி செயல்திறன் நிரூபிக்கப்பட்டது. இந்த அமைப்பு ஏஎன்32 விமானத்தில் இருந்து பாரா-இறக்கம் செய்யப்பட்டு, பின்னர் தானியங்கி முறையில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட தரையிறங்கும் இடத்திற்குச் சென்றது. இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படையின் 11 பாரா வீரர்கள் CADS-500-ஐ வானில் துரத்திச் சென்று ஒரே நேரத்தில் தரையிறங்கினர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783168
***********
(Release ID: 1783222)