சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு
प्रविष्टि तिथि:
18 DEC 2021 7:41PM by PIB Chennai
பொதுவான வாக்காளர் பட்டியல் குறித்த கூட்டம் ஒன்றுக்கு அழைத்து பிரதமர் அலுவலகம் 16.11.2021 அன்று அமைச்சரவைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர் , சட்டம் இயற்றுதல் துறைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதியது. இக்கடிதம் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பப் படவில்லை. எனினும் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு இது தொடர்பான நிபுணத்துவம் இருப்பதால் சட்டம் இயற்றுதல் துறைச் செயலாளர் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு எழுதி இக்கூட்டத்திற்கு அழைப்பது உசிதம் எனக் கருதினார்.
16.11.2021 ம் தேதி நடந்த கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது .இதில் மத்திய அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதிகாரப்பூரவக் கூட்டத்திற்குப் பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையாளர்களுடன் தனியாக முறைசாரா கலந்துரையாடல் நடைபெற்றது. இதுவும் காணொளி மூலம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு சட்டமியற்றுதல் துறை, மசோதா ஒன்றை வரைந்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அமைச்சரவையும் ஒப்புதல் அளித்ததை அடுத்து "2021தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா" நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மேலும் விவரங்கள் கீழ்கண்ட இணைப்பில் காணலாம்
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1783090&RegID=3&LID=1
***********
(रिलीज़ आईडी: 1783123)
आगंतुक पटल : 364