வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் அமைக்கப்படவுள்ள சான்டாகுரூஸ் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில், ரத்தினம் மற்றும் நகைகளுக்கான ரூ.70கோடி மெகா பொது வசதி மையத்திற்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அடிக்கல் நாட்டினார்

Posted On: 18 DEC 2021 6:05PM by PIB Chennai

மும்பை சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் சான்டாகுரூஸ் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தில் அமைக்கப்பட உள்ள மெகா ரத்தினங்கள் மற்றும் நகைத் தொழிலுக்கான பொது வசதி மையத்திற்கு மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல், இன்று (18.12.2021) அடிக்கல் நாட்டினார். 

நிகழ்ச்சியில் பேசிய திரு.பியூஷ் கோயல், இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தை புனரமைக்கும் பணிகள், அடுத்த 3-5 ஆண்டுகளில், ஒட்டுமொத்த சான்டாகுரூஸ் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி செயலாக்க மண்டலத்தையும் படிப்படியாக மறுநிர்மாணிக்க வழிவகுக்கும் என்றார்.  

இந்தப் பணிகளை விரைந்து முடிக்க தொழில்துறையினரும் சான்டாகுரூஸ் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி செயலாக்க மண்டல அதிகாரிகளும் ஒன்றிணைந்து பாடுபடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த மத்திய அமைச்சர், இந்த மண்டலத்தை மீண்டும் உலகத்தரம் வாய்ந்த ஒன்றாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.  

ரூ.70 கோடி செலவிலான இந்த மெகா பொதுவசதி மையம், ஒரு கனவுத் திட்டம் என்பதோடு, நாட்டின் நகை உற்பத்திக்கு பிரசித்திபெற்ற மையத்தில் அமைந்துள்ள திறன் பயிற்சிக்கான மையப்புள்ளியாக திகழும். 

*****


(Release ID: 1783119)
Read this release in: English , Urdu , Hindi , Marathi