பாதுகாப்பு அமைச்சகம்

பிக்கி ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ‘ இந்தியா 75-க்கு பின்னால்’ என்னும் குறிக்கோளை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் விளக்கினார்

Posted On: 18 DEC 2021 4:25PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான பிக்கியின் 94-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு ‘இந்தியா 75-க்கு பின்னால்’ என்னும் பொருள் பற்றி உரையாற்றினார். உலக அளவில் பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியாவை மையமாக மாற்ற வேண்டும் என்ற அரசின் தொலைநோக்கை அவர் விளக்கினார். பாதுகாப்பு துறையை நவீனமயமாக்குவதுடன், பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பை எட்டி நாட்டைப் பாதுகாக்க வலுவான சூழலைஉருவாக்குவதே அரசின் நோக்கம் என்று அவர் கூறினர்.

பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு இந்தியா இலக்கைஎட்ட , இந்தியா பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு இதர நாடுகளை நம்பியிருக்க முடியாது என்று அவர் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்புக்காகவும், மக்களின் பாதுகாப்புக்காகவும், நாம் நமது பாதுகாப்பு திறனை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். நமது அரசின் நோக்கம் யாரையும் தாக்குவது அல்ல; ஆனால் எல்லா நேரத்திலும், நாட்டின் ளது முன்னேற்றத்துக்கு வழிவகுக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை வெளிப்படுத்திய அமைச்சர், பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறையில், வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தை உள்நாட்டிலேயே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறினார். ‘’ தற்போது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறை உற்பத்தி சந்தை ரூ.85,000 கோடியாக உள்ளது. 2022-ல் இது ஒரு லட்சம் கோடியாக அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்.  2047-ம் ஆண்டு வாக்கில் இத்துறைகளில் இந்தியாவின் உற்பத்தி சந்தை ரூ.ஐந்து லட்சம் கோடியாக இருக்கும் என பார்க்கிறேன்’’  என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783013

                                ***************



(Release ID: 1783087) Visitor Counter : 241


Read this release in: English , Urdu , Hindi