பாதுகாப்பு அமைச்சகம்

விமானப்படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பு

Posted On: 18 DEC 2021 5:00PM by PIB Chennai

இந்திய விமானப்படையின் ஃப்ளையிங் மற்றும் தரைக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்ட 175 வீரர்களின் பயிற்சிக்காலம் முடிவடைந்ததைக் குறிக்கும் விதமாக,  துண்டிக்கல்லில் (தெலங்கானா) உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில், ஒருங்கிணைந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பு, டிசம்பர் 18, 2021 அன்று நடைபெற்றது.  விமானப்படை தலைமைத் தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி, பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், விஎம், ஏடிசி, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பயிற்சி நிறைவு அணிவகுப்பைப் பார்வையிட்டு, தொழில் ரீதியான பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த  ஃபிளைட் கேடட்டுகளுக்கு (விமானம் ஓட்டுதல் பிரிவு), ‘குடியரசுத் தலைவரின் பதக்கத்தை‘  வழங்கினார்.   பயிற்சியை நிறைவுசெய்த அதிகாரிகளில் 28 பெண்களும் அடங்குவர்.  

இந்த நிகழ்சசியில்  இந்தியக் கடற்படையைச் சேர்ந்த 2 அதிகாரிகள், இந்தியக் கடலோரக் காவல்படையைச் சேர்ந்த 9 அதிகாரிகள் மற்றும் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த மூன்று கேடட்டுகளுக்கும், விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றதற்கான பதக்கம் (Wings) வழங்கப்பட்டது. 

பயிற்சியின்போது, பல்வேறு பிரிவுகளிலும் சிறந்துவிளங்கிய அதிகாரிகளுக்கு,  விமானப்படை பயிற்சிப் பிரிவின் ஏர் ஆபிசர் கமாண்டிங் இன் சீஃப் ஏர்மார்ஷல் மனவேந்திர சிங் பதக்கங்களை அணிவித்தார்.  

இந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பையொட்டி நடைபெற்ற வாண் சாகசத்தில் பிளாட்டஸ் பிசி-7, ஹாக் மற்றும் பயிற்சி விமானமான கிரன் மற்றும் சேடக் ரக ஹெலிகாப்டர்கள் நிகழ்த்திய சாகசங்கள், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. 

இந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பையொட்டி நடைபெற்ற வாண் சாகசத்தில் பிளாட்டஸ் பிசி-7, ஹாக் மற்றும் பயிற்சி விமானமான கிரன் மற்றும் சேடக் ரக ஹெலிகாப்டர்கள் நிகழ்த்திய சாகசங்கள், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. 

**********



(Release ID: 1783085) Visitor Counter : 181


Read this release in: English , Urdu , Hindi , Bengali