குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

கல்வி முறையை இந்தியமயமாக்குவது அவசியம்; குடியரசு துணைத்தலைவர்

Posted On: 18 DEC 2021 2:35PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, இந்தியாவின் தொன்மையான ஞானம், பாரம்பரிய அறிவின் அடிப்படையில் கல்வி முறையை இந்தியமயமாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். காலனி ஆதிக்கக் கல்வி மக்களிடையே வேறுபாட்டையும், தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கி விட்டதாக அவர் கூறினார். தேசியக்  கல்விக்  கொள்கை 2020-ல் கூறியுள்ளபடி, கல்வி முறையில் மாறுதல் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.புதுமையான கண்டுபிடிப்பு, கற்றல் மற்றும் நுண்ணறிவுத் தலைமையின் மையமாக இந்தியாவை உருவாக்குவது அவசியம் என்று அவர் கூறினார்.

தில்லியில் நடைபெற்ற ரிஷித்துவ பல்கலைக் கழக தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், ஒரு காலத்தில் இந்தியா, உலகின் குரு என அழைக்கப்பட்டதாக கூறினார். நலாந்தா, தட்சசீலம், புஷ்பகிரி போன்ற பெரிய கல்வி நிறுவனங்களை நாம் பெற்றிருந்ததை சுட்டிக்காட்டிய அவர், உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இவற்றில் படித்ததை நினைவுகூர்ந்தார். கல்வித் துறையில் இழந்த அந்த இடத்தை இந்தியா பிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

முழுமையான கல்விப் பாரம்பரியப் பெருமையை இந்தியா பெற்றிருந்ததை நினைவுகூர்ந்த அவர், அத்தகைய கல்வி முறையை புதுப்பித்து, ரிஷித்துவ பல்கலைக்கழகம் போன்ற புதிய பல்கலைக்கழகங்களை  உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒரு நாட்டின் மாற்றத்துக்கு கல்வி முக்கிய பங்காற்றுவதைக் குறிப்பிட்ட அவர், கல்வியை ஒரு இயக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கல்வியை ஜனநாயகப்படுத்துவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய குடியரசு துணைத்தலைவர், கற்றலை கடைசி மைலுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்ககொண்டார். மாணவர்கள் எந்தவிதக்  கடினமான சூழ்நிலைகளையும் திறம்படக் கையாளும் திறமையை அவர்களிடையே உருவாக்க வேண்டும் என திரு நாயுடு கேட்டுக்கொண்டார். மாணவர்களிடத்தில், தலைமைப் பண்புகளை உருவாக்க, நமது பெருமைமிக்க கடந்த காலம் மற்றும் ரிஷிகளின் ஞானம் ஆகியவற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு சரேஷ் பிரபு, ரிஷித்துவ பல்கலைக்கழக வேந்தர்  டாக்டர் சின்மய் பாண்டே உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782975

                                                                                                *******************

 

 



(Release ID: 1783014) Visitor Counter : 245