சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடும்பக் கட்டுப்பாடு முன்முயற்சிகள் குறித்த சமீபத்திய தகவல்கள்: தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு வீதம்

Posted On: 17 DEC 2021 2:38PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று  உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

குடும்ப வளர்ச்சி இயக்கம் , விரிவாக்கப்பட்ட கருத்தடை வசதிகள், கருத்தடை செய்துகொள்வோருக்கான நஷ்டஈடு திட்டம், ஆஷா பணியாளர்கள் மூலம்  கருத்தடை சாதனங்களை வீடுகளுக்கே கொண்டு வந்து தருதல்  , குடும்பக் கட்டுபாடு தகவல் மேலாண்மை அமைப்பு, ஊடகப்  பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின், இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியம் தொகுப்பின் கீழ் குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக தமிழ்நாட்டில் 2018-19-ல் ரூ 12375.39 லட்சமும், 2019-20-ல் ரூ 11150.52 லட்சமும், 2020-21-ல் ரூ 9032.17 லட்சமும், 2021-22-ல் ரூ 184.98 லட்சமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2017-ல் ஆக 17.2 இருந்த பிறப்பு வீதம் 2019-ல் ஆக 14.2 இருந்தது. புதுச்சேரியில் 2017-ல் 13.2 ஆக இருந்த பிறப்பு வீதம் 2019-ல் 13.3 ஆக இருந்தது. 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782605

*********


(Release ID: 1782720) Visitor Counter : 378


Read this release in: English , Urdu , Telugu