உள்துறை அமைச்சகம்

பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு நடவடிக்கைகள்

Posted On: 16 DEC 2021 1:27PM by PIB Chennai

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

காவல்துறையும், சட்டம் ஒழுங்கும் மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம் ஆனாலும், நாடு முழுவதும் உள்ள பெண்களின் பாதுகாப்புக்கு ஏராளமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. பாலியல் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ள குற்றச்சட்டத் திருத்தம் 2018-ல் கொண்டுவரப்பட்டதுஇச்சட்டத்தின் கீழ் 12 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனை வழங்கப்படும்.

அவசர அழைப்புகளுக்கு 112 என்ற  தொலைபேசி எண் உருவாக்கப்பட்டது.   கணினி உதவியுடன் இந்த அழைப்பு வரும் இடங்களை கண்டறிந்து மீட்புக் குழுக்களை அனுப்ப முடியும்ஆபாச படங்கள் குறித்த புகார்களைத் தெரிவிக்க சைபர் கிரைம் இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கியது.

நாடு முழுவதும் பாலியல் குற்ற வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க தேசிய தரவுத் தளத்தையும் உள்துறை அமைச்சகம் தொடங்கியது. விசாரணையை மேம்படுத்த மத்திய மாநில தடயவியல் பரிசோதனை நிலையங்களில் டிஎன்ஏ பரிசோதனை வசதியை  ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையும் மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மாநிலங்கள் மற்றும்  யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை  அமைச்சகம் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வருவதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782158

 

-------

 



(Release ID: 1782414) Visitor Counter : 149


Read this release in: English , Urdu , Telugu