குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
தொடக்க நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச நிதித்திட்டம்
Posted On:
16 DEC 2021 12:41PM by PIB Chennai
சிறிய தொடக்க நிறுவனங்கள் மற்றும் புதிய நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதற்கு கடன் உத்தரவாத நிதித்திட்டம் குறு, சிறு மற்றம் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்திடம் ஏற்கனவே உள்ளது. புதிய தொழில்கள் தொடங்க குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்திடம் எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை. இந்த அமைச்சகத்தின் திட்டங்களை செயல்படுத்தவும், சிறு தொழில்களுக்குத் தேவையான உதவிகள் அளிக்கவும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தனது கள அலுவலகங்களை குறு, சிறு மற்றம் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் வைத்துள்ளது.
மக்களவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானே எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782131
***********
(Release ID: 1782357)
Visitor Counter : 159