குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கான புதிய மையங்கள் மற்றும் தொழில் பூங்காக்கள்
Posted On:
16 DEC 2021 12:42PM by PIB Chennai
புதிய தொழில்நுட்ப மையங்கள், விரிவாக்க மையங்கள், பொதுவசதி மையங்கள், தொழிற்பூங்காக்கள் அமைப்பதற்கு புதிய திட்டங்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. நாட்டில் குறு, சிறு தொழில்கள் தொகுப்பை மேம்படுத்த மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது. நிதியுதவி அளித்து குறு, சிறு தொழில்களின் உற்பத்தியை அதிகரித்து போட்டியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் தேவையின் அடிப்படையிலானது. புதிய திட்டத்திற்கான ஒப்புதல்களுக்கு மாநில அரசுகள் வேண்டுகோள்கள் விடுக்கலாம். ஹரியானா மாநிலத்தில் 38 திட்டங்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மக்களவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானே எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782132
************
(Release ID: 1782355)