பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன்கள்: தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி விவரம்
प्रविष्टि तिथि:
15 DEC 2021 2:28PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி. ஸ்மிருதி சுபின் இராணி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
அங்கன்வாடி பணியாளர்களின் சிறப்பான சேவை வழங்கலுக்காக அரசு மின்னணு-சந்தை மூலம் திறன்பேசிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. 33 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் மொத்தம் 11.03 லட்சம் திறன்பேசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்து இயக்கத்தின் கைபேசி செயலி அங்கன்வாடி பணியாளர்கள் பயன்படுத்தும் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குகிறது மற்றும் தானியங்குபடுத்துகிறது. பணியாளர்களின் நேரத்தை இது மிச்சப்படுத்துவதோடு, அவர்களின் பணியின் தரத்தை மேம்படுத்துகிறது.
ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் அனைத்து 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் 2021 மார்ச் 31 படி ரூ 5,31,279.08 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2021 மார்ச் 31 படி ரூ 25931.46 லட்சம் வழங்கப்பட்டுள்ளது, புதுச்சேரிக்கு ரூ 943.62 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1781669
***************
(रिलीज़ आईडी: 1781937)
आगंतुक पटल : 220