உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உணவுபதனத் தொழில்களைத் தொடங்க கடனுதவி

இடுகை இடப்பட்ட நாள்: 14 DEC 2021 1:56PM by PIB Chennai

உணவு மற்றும் வேளாண் பொருட்கள் பதப்படுத்தும் பிரிவுகளுக்கான கடன்கள், வங்கி நடைமுறையிலிருந்து கடன்பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கோடி வரை வேளாண் துறைக்கு கடன் வழங்குவது முன்னுரிமைத்துறை கடன் வழங்கலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்களும் கூட உணவு மற்றும் வேளாண் பொருட்கள் பதப்படுத்துதலில் ஈடுபடுவோர், முன்னுரிமைத்துறை கடன் பெறுவதன் கீழ், வேளாண்துறை கடனாக  வகைப்படுத்தப்பட்டுள்ளது.  முன்னுரிமைத் துறை கடன் வழங்கலின் கீழ் உணவு மற்றும் வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல் துறையின் நிலுவை கடன் புள்ளி விவரங்கள்:

வங்கிகள்

 

2019 மார்ச் 31 வரை
ரூ.கோடியில்

2020 மார்ச் 31 வரை
ரூ.கோடியில்

2021 மார்ச் 31 வரை
ரூ.கோடியில்

2021 செப். 30 வரை
ரூ.கோடியில்

பாரத ஸ்டேட் வங்கி

22236.85

20713.30

23730.34

16748.04

இதர பொதுத்துறை வங்கிகள்

65286.88

61445.34

119402.51

62225.28

தனியார் வங்கிகள்

41901.48

43053.34

54950.79

44789.99

மொத்தம்

129425.21

125211.98

198083.64

123763.31

 

உணவுபதனத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில்நிறுவனங்களுக்குக் கடன்கள் மறுக்கப்பட்டது தொடர்பான புகார் எதையும் அமைச்சகம் பெற்றிருக்கவில்லை. வங்கிகள் தொடர்பாக  விண்ணப்பதாரர்கள் ஏதாவது பிரச்சினை எழுப்பும் போது  வங்கியுடன் சரியான கலந்துரையாடல் மூலம் அதற்குத் தீர்வு காணப்படுகிறது. 

மக்களவையில் இன்று உணவுபதனத் தொழில்கள் துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல் எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

----


(வெளியீட்டு அடையாள எண்: 1781346) வருகையாளர் எண்ணிக்கை : 198
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Bengali