எரிசக்தி அமைச்சகம்

மின்சார அமைச்சகம்: விடுதலையின் அமிர்த மகோத்சவக் கொண்டாட்டம்

மின்சார சிக்கனம் குறித்த தேசிய பயிலரங்கை திறன்மிகு எரிசக்தி பயன்பாட்டுக்கான அலுவலகம் நடத்தியது

Posted On: 11 DEC 2021 4:47PM by PIB Chennai

விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின் கீழ் எரிசக்தி சேமிப்பு வாரத்தை 2021 டிசம்பர் 8 முதல் 14 வரை மின்சார அமைச்சகம் கொண்டாடி வருகிறது.

இந்தியாவின் 75 வருட சாதனையை குறிக்கும் தேசிய கொண்டாட்டமான விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின் ஒரு பகுதியாக மின்சார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் மின்சார சிக்கனம் குறித்த தேசிய பயிலரங்கை திறன்மிகு எரிசக்தி பயன்பாட்டுக்கான அலுவலகம் 2021 டிசம்பர் 10 அன்று நடத்தியது.

பயிலரங்கில் பங்கேற்ற மின்சாரத் துறைச்  செயலாளர் திரு அலோக் குமார், நான்கு அறிவுசார் பொருட்களை திறன்மிகு எரிசக்தி பயன்பாட்டுக்கான அலுவலக செயலாளர் மற்றும் இதர பிரமுகர்களின் முன்னிலையில் வெளியிட்டார். இந்திய-சுவிஸ் கட்டிட மின்சார சிக்கன திட்டத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்த பொருட்கள், இந்தியாவின்  நிர்ணயிக்கப்பட்ட தேசிய இலக்குகளை அடைய உதவும்.

'சந்தையை மாற்றியமைப்பதில் மின்சிக்கனம் மிக்க வீட்டு உபயோகப் பொருட்களின் பங்களிப்பு' எனும் தேசியப்  பயிலரங்கையும்  எரிசக்தி பயன்பாட்டுக்கான அலுவலகம் 2021 டிசம்பர் 10 அன்று நடத்தியது. விடுதலையின் அமிர்த மகோத்சவத்தின் ஒரு பகுதியாக இதுவும் நடைபெற்றது.

குளிர்சாதன பெட்டி மற்றும் ஏசி உற்பத்தியாளர்கள் சங்கம், நுகர்வோர் மின்னணு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை, திறன்மிகு எரிசக்தி பயன்பாட்டுக்கான அலுவலக தலைமை இயக்குனர்  தொடங்கி வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780464

                                                                      *************

 

(Release ID: 1780464)

 

*

 

 

 (Release ID: 1780477) Visitor Counter : 281


Read this release in: Hindi , English , Urdu , Telugu