தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வி.வி கிரி தேசிய தொழிலாளர் கல்விக்கழகத்தின் (விவிஜிஎன்எல்ஐ ) 50 வது பொதுச்சபை கூட்டம் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 11 DEC 2021 3:40PM by PIB Chennai

வி.வி கிரி தேசிய தொழிலாளர் கல்விக்கழகத்தின் ( விவிஜிஎன்எல்ஐ ) 50 வது பொதுச்சபை கூட்டம் புதிதில்லியில் 2021, டிசம்பர் 10 அன்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சரும் இந்தக் கல்விக்கழகத்தின் தலைவருமான திரு.பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கல்விக்கழகத்தின் பல்வேறு நடவடிக்கைளை ஆய்வுசெய்த மத்திய அமைச்சர் எதிர்கால தொழில்முறை நடவடிக்கைகளுக்கு வழிகாட்டினார். இந்தக் கல்விக்கழகம் உலகத்தரம் உடையதாக மாற வேண்டும் என்ற விருப்பதைத் தெரிவித்த அவர் எஸ் சான்றிதழ் பெறுவதற்கு பாடுபட வேண்டும் என்றார்.நிர்வாகவியல் மற்றும் சட்டம் பயிலும் மாணவர்களுக்கு அனுபவ பயற்சி அளிக்குமாறும் அவர் யோசனை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நான்கு நூல்களை அமைச்சர் வெளியிட்டார்தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் திரு.சுனில் பார்த்வால், விவிஜிஎன்எல்ஐ தலைமை இயக்குனர் டாக்டர் எச் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில  செய்திக் குறிப்பைக் காணவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780458

                                                                    ****


(रिलीज़ आईडी: 1780466) आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu