வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தெருவோர வியாபாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் டிஜிட்டல் இயக்கம்
प्रविष्टि तिथि:
09 DEC 2021 2:36PM by PIB Chennai
தெருவோர வியாபாரிகளுக்கான பிரதமரின் ஸ்வாநிதித் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக பயனாளிகள் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கான பயிற்சி அளிக்கும் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் கடன் பெறும் தெருவோர வியாபாரிகள் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள கடன் கொடுக்கும் போது, கடன் தரும் நிறுவனங்கள் க்யூஆர் கோட் மற்றும் யுபிஐ ஐடி-யை வழங்கி, அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இணைந்து ‘மெயின் பி டிஜிட்டல் 3.0’ இயக்கத்தை செப்டம்பர் 9 முதல் நவம்பர் 30 வரை மேற்கொண்டது.
மக்களவையில் இன்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணை அமைச்சர் திரு கவுசல் கிஷோர் எழுத்து மூலம் அளித்த பதிலில் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779683
(रिलीज़ आईडी: 1779781)
आगंतुक पटल : 327