அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கார்பன் உமிழ்வு இல்லாத இலக்கை எட்டுவதற்கான நாட்டின் எரிசக்தி மாற்றத்தில் அணுசக்திக்கு முக்கிய பங்குள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

प्रविष्टि तिथि: 09 DEC 2021 2:26PM by PIB Chennai

கார்பன் உமிழ்வு இல்லாத இலக்கை எட்டுவதற்கான நாட்டின் எரிசக்தி மாற்றத்தில் அணுசக்திக்கு முக்கியப் பங்குள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன் பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், நாட்டின் தற்போதைய அணுசக்தி நிறுவு திறன் 6,780 மெகா வாட் என்று அமைச்சர் கூறினார். அணுசக்தி தூய்மையானது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகும் என்று கூறிய அவர், அனல் மின்சாரத்தைப் போல 24 மணி நேரமும் செயல்படும்   அடித்தளத்தைக் கொண்டதாகும் என தெரிவித்தார்.

கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி-26 உச்சி மாநாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மரபுசாரா எரிசக்தியின் நிறுவு திறன் 500 ஜிகா வாட்டாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டதை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார்தற்போதைய 6,780 மெகா வாட் அணுசக்தி நிறுவு திறன் 2031ஆம் ஆண்டுக்குள் 22,480 மெகா வாட்டாக அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779669


(रिलीज़ आईडी: 1779721) आगंतुक पटल : 297
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Telugu