குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய எம்எஸ்எம்இ பயணக்குழு 12 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து தில்லியை அடைந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 09 DEC 2021 12:58PM by PIB Chennai

தேசிய சிறு, குறு மற்றம் நடுத்தர தொழில்நிறுவனங்களின் பயணக் குழு நேற்றிரவு உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல்  மாவட்டத்திலிருந்து தில்லியை அடைந்துள்ளது. இந்தக் குழு 12 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து வந்துள்ளது. நவம்பர் 27ம்தேதி  தில்லியில்  மத்திய எம்எஸ்எம்இ  அமைச்சர் திரு நாராயண் ரானே கொடியசைத்து இந்தப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்

இந்தக் குழு தனது முதல் கட்டப் பயணத்தை 5 மாநிலங்களில் மேற்கொண்டது. சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக எஎஸ்எம்இ  திட்டங்கள் குறித்த பிரச்சாரங்களை இக்குழு மேற்கொண்டதுதில்லியிலிருந்து புறப்பட்டு  ஃபரிதாபாத், ஆக்ரா, ஃபதேபூர், கான்பூர், அலகாபாத், வாரணாசி, பாட்னா, கோரக்பூர், சுல்தான்பூர், கன்னோஜ், லக்னோ உள்ளிட்ட நகரங்களில் இக்குழு பயணம் மேற்கொண்டது.

இந்தக் குழ ஆயிரக்கணக்கான மக்களுக்கு நேரடியாகவும், லட்சக்கணக்கானவர்களுக்கு மறைமுகமாகவும் எஎஸ்எம்இ திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.


(வெளியீட்டு அடையாள எண்: 1779690) வருகையாளர் எண்ணிக்கை : 205
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , Telugu , English , हिन्दी