ஜல்சக்தி அமைச்சகம்

ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ் மணிப்பூருக்கு மத்திய அரசின் மானியம் ரூ. 120 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது

Posted On: 08 DEC 2021 12:56PM by PIB Chennai

ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ் மணிப்பூருக்கு மத்திய அரசின் மானியம் ரூ. 120 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் இயக்க அமலாக்கத்திற்காக மாநிலத்திற்கு 2021-22-ல் மத்திய நிதியாக ரூ.481 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இது 2020-21 காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைப் போல் சுமார் நான்கு மடங்காகும். 

ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும்  2022 செப்டம்பருக்குள் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய மணிப்பூர் மாநிலம் திட்டமிட்டுள்ளது.  மாநிலத்தில் மொத்தமுள்ள 4.51 லட்சம்  ஊரகப்பகுதி வீடுகளில் இதுநாள் வரை 2.67 லட்சம் (59.2%) வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள்  வழங்கப்பட்டுள்ளன.

2019-ல் ஜல்ஜீவன் இயக்கம் அறிவிக்கப்பட்ட பின், 2.41 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.  2021-22-ல் 2.26 லட்சம் ஊரகப் பகுதி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்க மாநில அரசு திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1779158

******************

(Release ID: 1779158)



(Release ID: 1779275) Visitor Counter : 144