நிலக்கரி அமைச்சகம்
கல்கரி உற்பத்தியை அதிகரிப்பதற்கு அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் பரிந்துரைகள்
Posted On:
07 DEC 2021 1:16PM by PIB Chennai
இந்தியாவில் கல்கரி உற்பத்தியை அதிகரிக்க சமீபத்தில் அமைக்கப்பட்ட அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் தொழில்துறையினர் அடங்கிய குழு தனது பரிந்துரைகளை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் உள்நாட்டு கல்கரி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க கல்கரி திட்டத்தை நிலக்கரித்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. நிலக்கரித்து துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையிலான குழுவின் முக்கிய பரிந்துரைகள்:
* நிலக்கரி இந்திய நிறுவனமும்(சிஐஎல்), தனியார் துறையும் கல்கரியை வெட்டி எடுக்க கூடுதல் சுரங்கங்களை அடையாளம் காணுதல்.
* கல்கரி பயன்பாட்டுக்கு தற்போதுள்ள நவீனதொழில்நுட்பத்தை பின்பற்றுவது மற்றும் கல்கரியை சுத்தம் செய்வதற்கான கொள்கை திட்டத்தை உருவாக்குவது.
* கல்கரியை சுத்தம் செய்யும் வசதிகளை அமைக்க கல்கரி இணைப்புகளை தனியார் நிறுவனங்களுக்கு சிஐஎல் நிறுவனம் ஒதுக்கீடு செய்வது.
* தர அளவுகோல் அடிப்படையில் இறக்குமதி விலைக்கு நிகராக, உள்நாட்டு கல்கரிக்கு விலை நிர்ணய முறையை ஏற்படுத்துவது.
* கல்கரி சுரங்க விவரங்களை, சிஐஎல் நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட பரிந்தரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778758
-----
(Release ID: 1779032)
Visitor Counter : 284