சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
ஆலோசனைகளை வரவேற்று வெளியிடப்பட்ட வரைவு நோட்டரிகள் (திருத்தம்) மசோதா
प्रविष्टि तिथि:
07 DEC 2021 11:26AM by PIB Chennai
நோட்டரிகள் எனப்படும் சட்டப்பூர்வ சான்று அலுவலர்கள் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்காக நோட்டரிகள் சட்டம், 1952 நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. பரிந்துரைக்கப்பட்ட தகுதிகளை உடைய நோட்டரிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் நியமிக்க அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் அதிகாரம் அளிக்கின்றன.
நோட்டரி பப்ளிக் ஆக பணியாற்ற விரும்பும் இளம் தகுதி வாய்ந்த சட்டப் பயிற்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உணரப்படுகிறது. அவர்களின் தொழிலை சிறப்பாக கட்டியெழுப்ப இது உதவும்.
இதைக் கருத்தில் கொண்டு, வரம்பற்ற புதுப்பித்தலைக் குறைப்பதன் மூலம் பதினைந்து ஆண்டுகள் வரை (ஆரம்ப கால ஐந்து ஆண்டுகள் மற்றும் இரண்டு புதுப்பித்தல்கள் தலா ஐந்து ஆண்டுகள்) நோட்டரிகளின் ஒட்டுமொத்த காலத்தை கட்டுப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது, இதனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், நோட்டரி பணியின் சிறந்த வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக்கு இது வழிவகுக்கும் மற்றும் தொழிலின் தேவைகளை எளிதாக்கும்.
மேற்கண்ட நோக்கங்களை அடையவும், தவறான நடத்தைகள் மற்றும் மோசடிகளை தடுக்கவும், தொழிலை டிஜிட்டல் மயமாக்கவும் நோட்டரிகள் சட்டம், 1952-த்தை திருத்துவதற்காக வரைவு நோட்டரிகள் (திருத்தம்) மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கருத்துகள் பங்குதாரர்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. மேலே கூறப்பட்ட வரைவு மசோதாவின் நகல், சட்ட விவகாரத் துறையின் இணையதளத்தில் ( https://legalaffairs.gov.in/ ) கருத்துகள்/பார்வைகளுக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 2021 டிசம்பர் 15-க்குள் கருத்துகளை அனுப்பலாம்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778711
(रिलीज़ आईडी: 1778996)
आगंतुक पटल : 336