குடியரசுத் தலைவர் செயலகம்
மகாராஷ்டிராவில் உள்ள ராய்கட் கோட்டைக்கு சென்ற குடியரசு தலைவர், சிவாஜி சமாதியில் மரியாதை செலுத்தினார்
Posted On:
06 DEC 2021 7:00PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட் கோட்டைக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று சென்றார். சத்ரபதி சிவாஜி மகராஜுக்கு அவரது சமாதியில் மரியாதை செலுத்தினார்.
சிவாஜிக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பை பெற்றதை தாம் பாக்கியமாக கருதுவதாக குடியரசுத் தலைவர் கூறினார். இந்தப் பயணம் தனக்கு ஒரு புனிதப் பயணம் என்றும் அவர் கூறினார்.
சிவாஜி தலைமையின் கீழ், இந்த ஒட்டு மொத்த பிராந்தியத்தின் பெருமை அதிகரித்ததாகவும், தேசபக்தி உணர்வு மீண்டும் ஏற்பட்டதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார்.
சிவாஜியின் குணம் பற்றி, 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘சிவராஜ் - விஜயா’ என்ற சமஸ்கிருத புத்தகத்தில் மிகவும் திறம்பட விவரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புத்தகத்தை பல இந்திய மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என்றும், அப்போதுதான் இளம் தலைமுறையினர் சிவாஜி பற்றியும் அவரது தனிச்சிறப்பான பணிகள் குறித்தும் அறிய முடியும் என்று அவர் கூறினார்.
சிவாஜியின் சிந்தனை எதிர்காலம் சார்ந்ததாக இருந்தது என்றும், தனது அமைச்சரவையின் உதவியால் அவர் பல பயனுள்ள முடிவுகளை எடுத்தார் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.
இந்தியாவின் முதல் நவீன கடற்படையை உருவாக்கியவர் சத்ரபதி சிவாஜி எனவும் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778582
**************
(Release ID: 1778632)
Visitor Counter : 218