ஆயுஷ்
மணிப்பூரின் மோரேவில் 50 படுக்கை உர்ங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
05 DEC 2021 6:02PM by PIB Chennai
மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இன்று மணிப்பூர் மாநிலம் மோரேவில் 50 படுக்கை கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை காணொலி மூலம் தொடங்கி வைத்து, மணிப்பூரில் ஆயுஷ் தொழில் மேம்பாட்டுக்கான முக்கிய முன்முயற்சிகளை அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், 100 பள்ளி மூலிகை தோட்டங்கள், 10 படுக்கை கொண்ட ஏழு மருத்துவமனைகள், 15 ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் 50 நலவாழ்வு மையங்களை ஏற்படுத்த அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மணிப்பூர் மாநில முதலமைச்சர் திரு என் பைரன் சிங், மத்திய இணையமைச்சர் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள 6000 மூலிகை தாவங்களில், மணிப்பூரில் மட்டும் 1000 வகையான மூலிகைகள் உள்ளதாக கூறினார். மூலிகைகளை வளர்ப்பதன் மூலம், மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், மாநிலத்தின் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என்று அவர் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநில பெண்கள் தனித்துவமான அடையாளம் கொண்டவர்கள் என்றும், மூலிகை தாவரங்களை வளர்க்க அவர்கள் முன்வரவேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். அந்த மூலிகைகளுக்கு சந்தைகளை அரசு நிச்சயம் உருவாக்கி தரும் என்று அவர் உறுதியளித்தார்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778265
************
(रिलीज़ आईडी: 1778303)
आगंतुक पटल : 258