அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்துக்கு கடல்சார் கனிம வளம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்

प्रविष्टि तिथि: 05 DEC 2021 5:15PM by PIB Chennai

 இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்துக்கு, கடற்கரை மற்றும் கடலில் கிடைக்கும் வளங்களைக் கொண்ட, கடல்சார் கனிம வளம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ( தனிப்பொறுப்பு) ,புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார். மேலும், பருவநிலை மாற்ற பிரச்சினையை எதிர்கொள்ள தேவையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களை உருவாக்குவதில், நிக்கல், கோபால்ட் போன்ற உலோகங்களும் முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.

புவனேஸ்வரில் சிஎஸ்ஐஆர்-ஐஎம்எம்டியில் புதிய கட்டட வசதிகளை திறந்து வைத்த டாக்டர் ஜித்தேந்திர சிங், ஐஎம்எம்டியின் மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இடையே பேசினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆளுமையின் கீழ், வருங்கால எரிசக்தி மற்றும் உலோக தேவைகளுக்கு கடல் படுகை வளத்தை பயன்படுத்தும் கடல்சார் ஆராய்ச்சியில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து வருவதாக அவர் கூறினார்.

கடல் வளங்களை யன்படுத்தி இந்தியாவின் நீளப் பொருளாதாரத்தை மேம்படுத்த, சென்னையிலுள்ள தேசிய கடல் தொழில்நுட்ப மையத்துடன் ஒருங்கிணைந்து ஐஐஎம்டி  செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார். ஆழ்கடல் கனிம வளங்களைக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்த தேவையான உரிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778256

*********


(रिलीज़ आईडी: 1778300) आगंतुक पटल : 300
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi