வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் வேளாண் மற்றும் உணவு உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி வளத்தைப் பயன்படுத்துவதற்கான வேளாண் ஏற்றுமதி மாநாட்டுக்கு ஏபிஇடிஏ ஏற்பாடு
प्रविष्टि तिथि:
05 DEC 2021 1:37PM by PIB Chennai
பூர்வாஞ்சல் எனப்படும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் வேளாண் மற்றும் உணவு உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான வேளாண் ஏற்றுமதி மாநாட்டுக்கு ஏபிஇடிஏ ஏற்பாடு செய்திருந்தது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர்,வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு , பூர்வாஞ்சலுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவின் அந்நியச் செலாவணி வருவாய்க்கும் ஊக்கம் ஏற்படுத்தும் என்று கூறினார். மேலும், இந்தப் பிராந்தியத்தில் வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருமானமும் இருமடங்காகும் என்று கூறினார்.
2021-22-ல் வர்த்தக ஏற்றுமதி இலக்கு 400 பில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்றும், 2021 ஏப்ரல் முதல் நவம்பர் வரை 262 பில்லியன் டாலர் ஏற்றுமதி எட்டப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இதேபோல, 2021-22 –ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வேளாண் பொருட்கள் ஏற்றுமதி இலக்கான 43 பில்லியன் டாலரும் எட்டப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஏபிஇடிஏ தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து மற்றும் உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778221
************
(रिलीज़ आईडी: 1778299)
आगंतुक पटल : 282