நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

மகாராஷ்டிராவின் கோண்டியா, பண்டாரா, சந்திராப்பூரில் செறிவூட்டிய அரிசி உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் உத்வேகம் காட்ட வேண்டும்; உணவுத்துறை செயலர்

Posted On: 05 DEC 2021 11:58AM by PIB Chennai

சுதான்சு    அதிகாரிகளுடன் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலர் திரு சுதான்சு பாண்டே, சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டம் கர்தாவில் நெல் கொள்முதல் நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மகாராஷ்டிர மாநில மூத்த அதிகாரிகள், இந்திய உணவுக் கழக அதிகாரிகள் உடன் சென்றனர். நெல் கொள்முதல் குறித்து திருப்தி வெளியிட்ட அவர், கொள்முதல் கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு வலியுறுத்தினார். நெல்லின் வயதை அறிய மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய பரிசோதனை முறையைக் கடைப்பிடிக்குமாறு அதிகாரிகளை அவர்கொண்டார்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், செறிவூட்டிய அரிசி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்ததற்கு இணங்க, அத்திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதால், மகாராஷ்டிராவின் கோண்டியா, பண்டாரா, சந்திராப்பூரில் செறிவூட்டிய அரிசி உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் உத்வேகம் காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கர்தாவில் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் மாநிலத்தின் உணவுத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்.:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778198

                                                                                                                ****



(Release ID: 1778269) Visitor Counter : 167