பாதுகாப்பு அமைச்சகம்

22-வது கில்லர் குடியரசு தலைவரின் தர விருது ஸ்குவாட்ரனுக்கு வழங்கப்படுகிறது

Posted On: 05 DEC 2021 3:35PM by PIB Chennai

கில்லர் ஸ்குவாட்ரன் என்று வழங்கப்படும் 22-வது ஏவுகனை படகு ஸ்குவாட்ரனுக்கு வரும் 8-ம் தேதி, மும்பை கடற்படை தளத்தில் நடைபெறும் வண்ணமிகு அணிவகுப்பு நிகழ்ச்சியில், குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், குடியரசு தலைவர் தர விருதை வழங்குகிறார். இந்த சிறப்பான நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில், அஞ்சல் துறை சிறப்பு அஞ்சல்  உறை மற்றும் சிறப்பு தபால் தலையை வெளியிடுகிறது.

குடியரசு தலைவர் தர விருது, ராணுவ அலகுக்கு முதன்மை கமாண்டர் வழங்கும் உயரிய விருதாகும். 1951-ம் ஆண்டு மே 27-ம் தேதி, அப்போதைய குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், நாட்டுக்கு ஆற்றிய பெரும் சேவைக்காக இந்திய கடற்படைக்கு, குடியரசு தலைவரின் வண்ணங்கள் விருதை வழங்கினார். குடியரசு தலைவரின் தர விருதும் சிறிய ராணுவ பிரிவுக்கு வழங்கப்படும் அதே போன்ற விருதுதான்.

22-வது   ஏவுகனை படகு ஸ்குவாட்ரன் 1991-ம் ஆண்டு, 10 வீர் ரக படகுகள், 3 பிரபல் கிளாஸ் படகுகளுடன் மும்பையில் உருவாக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநர், முதலமைச்சர், கடற்படை தளபதி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1778234

                                                                                                                                               *******(Release ID: 1778268) Visitor Counter : 182