பாதுகாப்பு அமைச்சகம்
'எகுவெரின் பயிற்சி' எனும் இந்திய-மாலத்தீவு இராணுவ கூட்டுப் பயிற்சியின் 11வது பதிப்பில் பங்கேற்க இந்திய இராணுவக் குழு புறப்பட்டது
प्रविष्टि तिथि:
05 DEC 2021 9:14AM by PIB Chennai
'எக்ஸ் எகுவெரின் பயிற்சி' எனும் இந்திய-மாலத்தீவு இராணுவ கூட்டுப் பயிற்சியின் 11வது பதிப்பு மாலத்தீவுகளில் உள்ள கத்தூ தீவில் 2021 டிசம்பர் 06 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியானது, தரையிலும் கடலிலும் உள்ள நாடுகடந்த பயங்கரவாதத்தைப் புரிந்துகொள்வது, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் சிறந்த இராணுவ நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் இயங்குநிலையை மேம்படுத்தும்.
கடுமையான பயிற்சியுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் இந்த கூட்டு ராணுவப் பயிற்சியில் இடம்பெறும். மாலத்தீவுடனான இந்தியாவின் உறவினை மேலும் வலுப்படுத்த இந்தப் கூட்டு பயிற்சி வழிவகுக்கும்.
(रिलीज़ आईडी: 1778215)
आगंतुक पटल : 391