கனரகத் தொழில்கள் அமைச்சகம்

இந்திய ஆட்டோமொபைல் துறை உலகளாவியதாக மாறி மின்சார வாகனத்துறை சந்தையின் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும்: டாக்டர் மகேந்திர நாத் பாண்டே

Posted On: 04 DEC 2021 4:25PM by PIB Chennai

இந்திய வாகன உற்பத்தி தொழில் நிறுவனங்கள் உலகளாவிய வளர்ச்சியை எட்டி, சர்வதேச மின்சார வாகன சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே கூறினார்.

கோவாவில் கனரக தொழில்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த வட்டமேசை மாநாட்டில் உரையாற்றிய டாக்டர். பாண்டே, வளர்ந்து வரும் இத்துறையின் சிறந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியத் தொழில்துறையினர் முன்னேற  வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 

காப் 26 பருவநிலை மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கிய "பஞ்சமிர்த" கொள்கைகளுக்கான இந்தியாவின் லட்சியத்தை அடையவும், இந்திய இளைஞர்களுக்கு பெரும் வேலைவாய்ப்புகளை வழங்கவும் வாகனத் துறையின் வளர்ச்சி நிச்சயமாக நமக்கு உதவும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

மின்சார வாகனங்களுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில் உலகளாவிய சூழலில் மாற்றம் நிகழ்ந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். மின்சார வாகன உதிரிபாகங்களில் புதுமைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இதற்கு வலுவூட்டுவதாக அவர் கூறினார்.

எனவே இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை விரைவுபடுத்துவது அவசியம் என்றார் அவர், “இந்தியாவை மின்சார வாகன உற்பத்தி மையமாக நாம் மாற்ற வேண்டும்”, என்று அவர் கூறினார். இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் மட்டும் 2030-க்குள் ரூ.20 லட்சம் கோடியை மிச்சப்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1778015

****



(Release ID: 1778082) Visitor Counter : 183


Read this release in: English , Urdu , Hindi , Marathi