விவசாயத்துறை அமைச்சகம்

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை பயன்கள்

Posted On: 03 DEC 2021 5:08PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக  இன்று பதில் அளித்த மத்திய வோளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:

 

விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலையை உறுதி செய்யவும்,   முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கவும் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்தது. 

 

காரீப் சந்தைப் பருவம் 2020-21ல், 894.19 லட்சம் மெட்ரிக் டன் நெல் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது . இதன் மூலம் 131.13 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

 

2021-22 ராபி சந்தை பருவத்தில் 433.44 லட்சம் மெட்ரிக் டன்  கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் 49.20 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

 

2021 நவம்பர் 27ம் தேதி வரை 8.37 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்களைஅரசு கொள் முதல் செய்து குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.4,65,688.44 லட்சம் வழங்கியள்ளது. இதன் மூலம் சுமார்  5.28 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777683

****

 



(Release ID: 1777841) Visitor Counter : 149


Read this release in: English , Urdu , Marathi