ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கைத்தறி துறையை ஊக்குவிக்க தரமான மூலப்பொருட்கள் விநியோகம்

Posted On: 03 DEC 2021 3:49PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஜவுளி இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

 

கைத்தறி நெசவாளர்களுக்கு நியாயமான விலையில் நூல் கிடைப்பதற்காக மூலப்பொருள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், அனைத்து வகையான நூல்களுக்கும் சரக்குப்  போக்குவரத்துக்  கட்டணம் அவர்களுக்குத் திருப்பி அளிக்கப்படுகிறது.

 

மேலும், பருத்தி துணி நூல், உள்நாட்டு பட்டு, கம்பளி மற்றும் கைத்தறி நூல், இயற்கை இழைகளின் கலப்பு நூல் ஆகியவற்றிற்கு அளவு உச்சவரம்புடன்  கூடிய 15% விலை மானியம் தரப்படுகிறது.

 

கைத்தறி நெசவாளர்களுக்கு தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தால் கிடங்குகள் மூலம் தேவையான தரத்தில் சாயங்கள் மற்றும் ரசாயனங்கள் கிடைக்க செய்யப்படுகின்றன.

 

திறன் மேம்பாடு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடாகும். சமர்த் எனப்படும் கைத்தறி உள்ளிட்ட ஜவுளித் துறையின்  திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நெசவாளர்களுக்கு நெய்தல், சாயமேற்றுதல் , வடிவமைப்பு ஆகியவற்றில்  திறன் மேம்பாட்டு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777653

****


(Release ID: 1777818) Visitor Counter : 204


Read this release in: English , Urdu , Punjabi