ஜவுளித்துறை அமைச்சகம்
1714 இந்திய கைத்தறி பொருட்கள் பதிவு பெற்றுள்ளன, தமிழ்நாட்டில் இருந்து 179
प्रविष्टि तिथि:
03 DEC 2021 3:50PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஜவுளி இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
உயர் தரமான, குறைபாடுகளே இல்லாத மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முக்கிய கைத்தறி தயாரிப்புகளின் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரப்படுத்துதலுக்காக இந்திய கைத்தறி பிராண்ட் (ஐஎச்பி) தொடங்கப்பட்டது.
இதில் 31.10.2021 அன்று வரை 1714 பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து 179 பொருட்கள் பதிவு பெற்றுள்ளன. ஐஎச்பி தயாரிப்புகள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களால் விற்கப்படுகின்றன. 31.10.2021 நிலவரப்படி இந்த முகமைகளால் 1102.69 கோடி ரூபாய் விற்பனை பதிவாகியுள்ளது.
கைத்தறிப் துணிகள் உள்ளிட்ட ஐஎச்பி பொருட்களின் மின்-சந்தைப்படுத்தலுக்காக 23 மின்-வணிக நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 31.10.2021 நிலவரப்படி இந்த தளங்களால் ரூ 134.35 கோடி விற்பனை பதிவாகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777655
****
(रिलीज़ आईडी: 1777804)
आगंतुक पटल : 161