சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி
Posted On:
03 DEC 2021 3:32PM by PIB Chennai
உற்பத்தியாளர்களால் தினசரி அளிக்கப்படும் அறிக்கை அடிப்படையில், பெட்ரோலியம் மற்றும் எரிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பின் ஆவணங்கள்படி திரவ ஆக்சிஜனின் தினசரி உற்பத்தித் திறன் 8,778 எம்டி (MT) ஆக உள்ளது. இது 1.10.2020 நிலவரப்படி நாளொன்றுக்கு 6876 எம்டி (MT) ஆகவும், 28.11.2021 நிலவரப்படி நாளொன்றுக்கு 8778 எம்டி (MT) ஆகவும் இருந்தது.
நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் இருப்பினை மேம்படுத்த 1563 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்திக் கூடங்களை மத்திய அரசு அமைத்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிஎம் கேர்ஸ் நிதியின் கீழ் அமைத்து இயக்கப்படும் 1225 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்திக் கூடங்களும் இதில் அடங்கும்.
இந்த தகவல்களை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1777645
****
(Release ID: 1777770)